பெரியகுளம் திரவியம் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா டாக்டர் பாண்டியராஜ் பங்கேற்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் அமைந்துள்ள திரவியம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திரவியம் கல்வி குழுமங்களின் சேர்மன் மருத்துவர் பாண்டியராஜ் தலைமை தாங்கினார். கல்விக்குழும செயலாளர் ஹேமலதா பாண்டியராஜ், இயக்குனர் டாக்டர் இமானுவேல் ஜூடா.. டாக்டர் t. வசந்த் CE0 டாக்டர் k ஆனந்தி இன்சார்ஜ். MR.R. ஆனந்த்   அகடாமி coordinator ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி மாணவியர் பெற்றோர், பேராசிரியர் பெருமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.