பெங்களூர் சஞ்சய்நகரில் தென்னிந்திய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி எஸ் டி குமார் பங்கேற்பு

பெங்களூர் சஞ்சய்நகரில் தென்னிந்திய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி எஸ் டி குமார் பங்கேற்பு
பெங்களூர் சஞ்சய்நகரில் தென்னிந்திய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி எஸ் டி குமார் பங்கேற்பு
பெங்களூர் சஞ்சய்நகரில் தென்னிந்திய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி எஸ் டி குமார் பங்கேற்பு
பெங்களூர் சஞ்சய்நகரில் தென்னிந்திய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி எஸ் டி குமார் பங்கேற்பு

பெங்களூர் சஞ்சய்நகரில் தென்னிந்திய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி 

நூற்றுக்கும் மேற்பட்ட சிலம்பம் பயின்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்


பெங்களூர் சஞ்சய் நகரில் கர்நாடக மாநில உலக சிலம்பம் விளையாட்டு அசோசியேசன் சார்பில் தென்னிந்திய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் - 2025 போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலம்பம் பயின்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இடையில் சிலம்ப போட்டிகள் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிராபி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும் பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவருமான எஸ் டி குமார்  உலக சிலம்பம் விளையாட்டு அசோசியேஷனின் நிறுவனத் தலைவர் சுதாகரன் தமிழ்நாடு உலக சிலம்பம் விளையாட்டு அசோசியேஷனின் டெக்னிக்கல் இயக்குனர் சின்னச்சாமி அகில கர்நாடக விளையாட்டு கராத்தே  பெங்களூர் மாவட்ட தலைவர் சி. கே. செங்கப்பா மற்றும் ஆசான்கள் கார்த்திக் ,கனகராஜ் ஹரிகிருஷ்ணன், ஜமிஷா, ரவிச்சந்திரன், புஷ்பா ரவிக்குமார், அலெக்ஸாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில்
 தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவருமான எஸ். டி. குமார் பேசும் போது சிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு வகையை சேர்ந்தது இதில் பல ஆட்ட வகைகள் உள்ளன,  இன்று இங்கு தொடக்கத்தில் ஆடிய  சிலம்பம், மான் கொம்பு, சுருள் வாள், போன்ற வீரவிளையாட்டுகள். காண்டோரை, மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது, தமிழர் வரலாற்றுடன் சிலம்பம் பிணைந்துள்ளது, சங்க இலக்கியங்களில் சிலம்பம் குறித்த குறிப்புகள் உள்ளது. ஐ. நா தலைமையகத்தில், சிலம்பம் WSA மூலம் அங்கிகாரம் பெற்றுள்ளது. 
 கராத்தே போன்ற பல விளையாட்டுகளுக்கு டிப்ளமோ வழங்குது போல், தென்னிந்திய பண்பாட்டை மையமாக கொண்ட, சிலம்பம் விளையாட்டுக்கு ஊக்குவிக்கும் வகையில், கர்நாடக அரசை, கர்நாடக விளையாட்டு துறை மூலம் அனுக இருக்கிறோம். சிலம்பம் விளையாட்டு பெண்களின் மிகச்சிறந்த தற்காப்பு கலை. இதை ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் பெருமளவில் கற்க வேண்டும். பள்ளிகளை அனுகி மிக சிறந்த உடற்பயிற்சி யான சிலம்பத்தை சேர்க்க சொல்லி எடுத்துரைக்கப்டும்  பெங்களூரில் பல இடங்களில் சிலம்பம் பயிற்சி அளிக்க நாங்கள் ஏற்பாடுகள் செய்வதற்கு பகுதி பிரமுகர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த சிலம்பம் போட்டியை கர்நாடக உலக சிலம்பம் விளையாட்டு அசோசியேசன் பொதுச் செயலாளர் ரோலந்த் தலைவர் வசந்த் பூவையா பொருளாளர் வெங்கடேஷ் டெக்னிக்கல் இயக்குனர் பார்வதி தேவி ஒருங்கிணைப்பு செயலாளர் ரூபா பிரியதர்ஷினி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்