உசிலம்பட்டி அருகே பேருந்து வசதி தங்க தமிழ்செல்வன் பங்கேற்பு அஜீத் பாண்டிக்கு பாராட்டு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா திம்மநத்தம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட எர்ரம்பட்டி கிராமத்திற்கு இதுவரை பேருந்து வசதி இல்லாமல் இருந்து வந்தது அதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை மனுவாக பெற்ற திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் திரு அஜித் பாண்டி அவர்கள் ஏற்பாட்டின் படி இன்று காலை 10 மணி அளவில் உசிலம்பட்டியில் இருந்து எரம்பட்டிக்கு புதியதாக பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது இந்த நிகழ்விலே தேனீ பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களும் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் திரு சுதாகரன் அவர்களும் உசிலம்பட்டி நகரச் செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் எரம்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் அஜித் பாண்டிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது