உசிலம்பட்டிஅருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட  இருவர் கைது உசிலம்பட்டி போலீசார் அதிரடி நடவடிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் அதிகம் புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது சமீப காலமாக இது ஒரு கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவரப்பட்டது

இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் உசிலம்பட்டி அருகே  வத்தலகுண்டு சாலை மெய்யனம்பட்டி அருகில் உசிலம்பட்டி போலீசார் தீவிர வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டு வந்தனர் . 
அப்போது அந்த வழியே வந்த உசிலம்பட்டி கண்ணன் தியேட்டர் எதிர்புறம் வசித்து வரக்கூடிய ராஜபாண்டி என்பவருடைய மனைவி கௌசல்யா வயது 32 
திருப்பூர் மாவட்டம் நல்லூத்து பாளையம் அன்னக்கொடி என்பவரின் மகன் உதயகுமார் வயது 37 இவர்கள் இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர் அவர்களிடம் இருந்து உசிலம்பட்டி போலீசார் ஆறு கிலோ கஞ்சா மற்றும் இரண்டு செல்போன்கள்  போலீசாரால் கைப்பற்றப்பட்டது
இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் உசிலம்பட்டிபோலீசாரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்   மேலும் உசிலம்பட்டிபகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி பகுகிகளில்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று கூறி வருகின்றனர் .