பட்டுப்பூச்சி வளர்ப்பு பிரிவில் வேளாண் கல்லூரி மாணவிகள்
பட்டுப்பூச்சி வளர்ப்பு பிரிவில் வேளாண் கல்லூரி மாணவிகள்
மதுரை மாவட்டம், செல்லம்பட்டியில், ஊரக பணி அணுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சந்தித்து வரும் மாணவிகள் ஆயிஷா நல்லா, நா. தாரனி, ஆ. தர்சினி, பி. தர்சினி, தி. திவ்ய பிரபா, அ. எமிமா, அ. ரா காயத்திரி, செ. காயத்ரி, பா .கோபிகா,ஆகியோர் முதலைக்குளம் பட்டுப்பூச்சி வளர்ப்பு நடைபெறும் வீட்டில் நேரில் சென்று விவசாயிகளை சந்தித்தனர். அங்கு பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்த தகவல்களை குறித்து அறிந்தனர்.
பிரிவு கூறியதாவது, அவை 2 எக்டேர் மல்பெரி (எம்ஆர் 2) வகை பயிரிட்டு வருகிறார். இந்த எம்ஆர் 2 வகை மல்பெரி 5 ஆண்டுகளுக்கு பயிரிடலாம். இது தற்போதைய பருவத்திற்கு உகந்ததால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த மல்பெரியை 4×2 அடி இடைவெளியில் நட வேண்டும். மேலும் இதனை வெட்டுவதற்காக அரசின் நவீன இயந்திரங்கள் (brush cutter) மூலம் வெட்டலாம். இதன் மூலம் உழவுக்கு செலவாகும் நேரத்தை குறைக்கலாம். மேலும் இதை வெட்டிய பிறகு 7 நாட்களுக்கு பிறகு பட்டுப்பூச்சிகள் வளர்ச்சிக்கு ஏற்கத்தக்கதாக இருக்கும்.
Comments (0)
Facebook Comments