உசிலம்பட்டி 58 கிராமகால்வாயில் கான்கிரீட்பாலம், அமைச்சா் ஆா்பி. உதயகுமார் உறுதி

உசிலம்பட்டி 58 கிராமகால்வாயில் கான்கிரீட்பாலம், அமைச்சா் ஆா்பி. உதயகுமார்  உறுதி
புதுப்பட்டி
உசிலம்பட்டி 58 கிராமகால்வாயில் கான்கிரீட்பாலம், அமைச்சா் ஆா்பி. உதயகுமார்  உறுதி

 உசிலம்பட்டி : உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தை வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு


மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய 58 கால்வாய்த்திட்டம் இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின் பெயரில் தண்ணீர் திறக்கப்பட்டது. 

நேற்று முன்தினம் இரவு சுமார் காலை 5 மணி அளவில் எலிகள் காட்டுப்பன்றிகள் போன்றவைகளால்  நீர் வரும் வழிகளில் ஓட்டை இருந்தது இதனால்,  ஆண்டிபட்டி அருகே உள்ள புதூர் என்னும் கிராமத்தில் உடைப்பு ஏற்பட்டது. 

இச்செய்தியை தொடர்ந்து,  உசிலம்பட்டி பொதுமக்கள்  வேதனை அடைந்திருந்த நிலையில் இரவு பகல் பாராமல் வேலையில் அனைவரும்  உடனடியாக உடைந்த பகுதியை சரி செய்தனர், அந்த பகுதியில் கடந்தாண்டு உடைப்பு ஏற்பட்டது தற்போது அதே பகுதியில் மீண்டும்  உடைப்பு ஏற்பட்டதால் இன்று உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. பா. நீதிபதி அவர்கள் தலைமையில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு.  ஆர்.பி. உதயகுமார் அவர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். 

தற்போது அனைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் நீர் திறக்கப்படும் இந்த இடம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால்,  வாய்க்கால்பகுதியில் சுமார் 6 கிலோ மீட்டர் வரை காங்கிரீட் வாய்க்கால் அமைத்து சரி செய்துதரப்படும் என்று அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தனர். 

 

P. வேல் முருகன் 

தமிழ் ஒளி செய்தியாளர்,

+919159555110