திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி வருஷாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தை முன்னிட்டு
இன்று வருஷாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுசாமி தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருஷாபிஷேகம் என்பது ஆண்டிற்கு இரண்டு முறை கொண்டாடப்பட்டு வருகிறது.
அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளானஆனி உத்திரத்தன்று ஒரு வருஷா பிஷேகமும், கோவிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளான தை உத்திரத்தன்று ஒரு வருஷாபிஷேகமும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமான தை உத்திரத்தை முன்னிட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
தங்க கொடி மரம் அருகில் வைக்கப்பட்ட கும்ப கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று
பூஜை செய்யப்பட்ட கும்ப கலசங்கள் விமான தளத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது
மூலவர், சண்முகர்,வள்ளி, தெய்வானை, பெருமாள் விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து விமான கலசங்களுக்கு தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Comments (0)
Facebook Comments