வெடிக்கு பதில் செடி உசிலம்பட்டி மாணவனின் புதிய முயற்சி குவியும் பாராட்டு

வெடிக்கு பதில் செடி உசிலம்பட்டி மாணவனின் புதிய முயற்சி குவியும் பாராட்டு
வெடிக்கு பதில் செடி உசிலம்பட்டி மாணவனின் புதிய முயற்சி குவியும் பாராட்டு

பள்ளி மாணவனின் பசுமைத் தீபாவளி கொண்டாட்டம்: 

 

மதுரை மாவட்டம் அ.பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவன் தருண் சஞ்சய் தீபாவளி அன்று உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பசுமைத் தீபாவளி கொண்டாடினார். 

 

 அ.பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விருந்தினர்களுக்கும் மரக்கன்று வழங்கி பாராட்டுவது என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனைப் பின்பற்றி பத்தாம் வகுப்பு மாணவன் தருண்சஞ்சய் தீபாவளி நாளான இன்று 

 பட்டாசு வெடிக்க பெற்றோர்கள் கொடுத்த பணத்துக்கு மரக்கன்றுகள் வாங்கி புகையில்லாத பசுமைத் தீபாவளியை வலியுறுத்தி உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தீபாவளி கொண்டாடினார். 

 

மாணவனின் முன்முயற்சிக்கு நம் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.