உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் உளவியல் கருத்தரங்கம் பேராசிரியர் விஜயா மாணவர்களுடன் கலகலப்பான சிந்தனை பகிர்வு
ஏப்ரல் 18
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் மாணவர்களுக்கான கல்வியியல் உளவியல் குறித்த சிறப்பு விரிவுரை நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுரி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜோதி ராஜன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் தவமணி வரவேற்று பேசினார். சிறப்பு கருத்துரை யாளராக கலந்துகொண்ட விருதுநகர் வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரி பேராசிரியை விஜயா கல்வியல் உளவியல் என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை ஆற்றினார். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் பல்வேறு சுவராசியமான கேள்விகளுக்கு சிரிப்புடன் கூடிய சிந்தனை சிந்தனை கருத்துக்களை பேராசிரியர் விஜயா பேசியது மாணவர்களை வெகுவாக கவர்ந்தது
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பாண்டி இணை முதல்வர் ஈஸ்வரன் ஒருங்கிணைப்பாளர் பொன்ராம், பேராசிரியர் வைரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் செந்தில்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியைகள் அல்போன்சா, அகிலா, சூர்யா, சுகன்யா, நாக பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.
Comments (0)
Facebook Comments