ஓசூர் அருகேகாட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு...
ஓசூர் அடுத்த குத்துக் கோட்டை கிராமத்தில் ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி யாமன்னா (65) உயிரிழப்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணையில்....
யாமன்னா என்பவரது மாடு வனப்பகுதியில் இருந்து நேற்று மாலை வீட்டிற்கு வராததால் நேற்று மாலை மாடை தேடி வனப்பகுதிக்குள் சென்று இருக்கிறார் அவரும் நேற்று இரவு வராததால் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் வனத்துறை தேடிப் பார்த்ததில் அவர் ஒற்றை யானை தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது...
பின்னர் உயிரிழந்த யாமன்னா பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவ இடத்தில் காவல்துறையினரும் வனத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Comments (0)
Facebook Comments