எந்த நேரத்திலும் பொதுமக்கள் என்னை நேரடியாக சந்திக்கலாம். தென்காசி ஆட்சியர்
எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம் தென்காசி மாவட்டஆட்சியர் அறிவிப்பு
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் முதல் ஆட்சியராக அருண் சுந்தர் தயாளனும், இரண்டாவது ஆட்சியராக சமிரனும், மூன்றாவது ஆட்சியராக கோபாலசுந்தரராஜனும், நான்காவது ஆட்சியராக ஆகாஷ், ஐந்தாவது ஆட்சியராக துரை.ரவிச்சந்திரன் பதவி வகித்து வந்த நிலையில்,
கடந்த சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றி வந்த துரை.ரவிச்சந்திரனை உயர்கல்வித்துறைக்கு மாற்றம் செய்து, தென்காசி மாவட்டத்தில் புதிய ஆட்சியராக கமல் கிஷோர் என்பவரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆட்சியரான கமல் கிஷோர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அதாவது, தென்காசி மாவட்டத்தின் 6 -வது ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள கமல் கிஷோர் கையெழுத்திட்டு ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில்
தென்காசி மாவட்டம் விவசாய அதிகம் உள்ள மாவட்டம் என்பதால் அதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
எந்த நேரத்திலும் பொதுமக்கள் என்னை நேரடியாக சந்திக்கலாம்.
அரசின் திட்டங்கள் மக்களிடம் உரிய முறையில் சென்று சேர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments