விவசாயக் கல்லூரி மாணவிகள் களப்பணி உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி be
மார்ச் 10
மதுரை வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் கிராம அனுபவத் திட்டத்தின் கீழ் செல்லம்பட்டியில் தங்கி பயின்று வருகின்றனர். அதன்படி செல்லம்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த புள்ளநேரி பகுதியில் உள்ள கிராமங்களில் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள்கா.லெட்சுமிஸ்ரீ
லலிதா,லோகப்பிரியா,லூர்துமேரி, மாலதி,மணிமேகலை ஆகியோர் தென்னை மரத்திற்கு ஊட்டசத்து குறித்து ( coconut root feeding ) செய்முறையை பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளிந்தனர் இவர்கள் விவசாயிகளுக்கு அதன் நன்மைகளையும் எடுத்துக் கூறினர். தென்னை மரத்திற்கு ஊட்டசத்து என்பது ஆறு மாத இடைவெளிக்கு ஒருமுறை , ஒரு தென்னை மரத்திற்கு 200 மில்லி ( 40 மில்லி தென்னை டானிக் + 160 மில்லி தண்ணீர் ) என்ற அளவில் ஆண்டுக்கு இரண்டு முறை வேர் தீவனம் செய்யலாம் என்று விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள்
மாணவிகள் கொடுத்த இந்த செயல்முறை விளக்கங்களை தெரிந்து கொண்ட விவசயிகள் மாணவிகளை பெரிதும் பாராட்டினர்
Comments (0)
Facebook Comments