சுகாதாரமற்ற நிலையில் உள்ள கிராமம், கிராம மக்களின் கோரிக்கைகளை ஏற்காமல் சுகாதாரத் துறை அலட்சியம்
மதுரை T. கல்லுப்பட்டி:
மதுரை மாவட்டம்
தே கல்லுப்பட்டி ஒன்றியம், கூவலப்புரம் கிராமத்தில் சுகாதாரமற்ற நிலையில் டெங்கு, போன்ற உயிரை பறிக்கும், கொசுகளின் வாழ்விடமாகவும் நோய்தொற்று ஏற்படும் வகையிலும் மிகவும் மோசமாக மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும், தெற்கு தெருவில் பிளவர்பிக்கள் ரோடு போடுவதற்கும்,கழிவுநீர்
கால்வாய் அமைத்தல், போன்ற கோரிக்கைகளை கிராம சபை கூட்டத்தில் பல முறை தெரிவித்துள்ளனர் .
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,
இதனால் தெருக்களில் தண்ணீர் தேங்கி, பல வியாதிகளும், நோய் தொற்றுகளும் வேகமாக பரவி வருகிறது,என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனையோ அரசு அதிகாரிகள் இருந்தும்,
பெயர் அளவில் பார்வையிட்டு செல்கின்றனர் தவிர, மேல் படி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாகும்.
மக்கள் கூறியதாவது:எத்தனையோ அரசு
திட்டங்கள்இருந்தும்,
அரசு எத்தனை நிதியை ஒதுக்கீடு செய்து இருந்தாலும்
அரசு பணியாளர்களின்
அலச்சிய போக்கே, எங்கள் கிராமத்தின் இந்நிலைக்கு காரணம் மற்றும் டெங்கு வைரஸ் காய்ச்சல் T.கல்லுப்பட்டி
கூவலப்புரம் கிராமத்திற்கு வந்தால்
அதற்கான முழுபொருப்பு சுகாதாரத் துறை சாரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
P. வேல் முருகன்
தமிழ் ஒளி செய்தியாளர்,
+919159555110
Comments (0)
Facebook Comments