உசிலம்பட்டியில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினால் ஸ்வீட் பாக்ஸ் இலவசம்
*உசிலம்பட்டியில் ஹெல்மெட் அணிந்தால் ஸ்வீட் பாக்ஸ் இலவசம் வாகன ஓட்டிகள் உற்சாகம்* மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டும் முதல் 200 நபர்களுக்கு உசிலம்பட்டி போக்குவரத்து காவல்துறையோடு இணைந்து உள்ளூர்த் தொலைக்காட்சி சார்பில் ஸ்வீட் பாக்ஸ் வழங்கி ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் தமிழ் ஒளி தமிழரசன் தலைமையில் உசிலை சேகரன்,பெருமாள், சிந்தா , கனிஷ்குமார் சசி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இது குறித்து கருத்து தெரிவித்த வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதாக உறுதி செய்தனர் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு உசிலம்பட்டி பகுதி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது
Comments (0)
Facebook Comments