உசிலம்பட்டியில் கஞ்சா...ஆ...ஆ... தொடரும் வேட்டை .
உசிலம்பட்டி 08.11.2023
*உசிலம்பட்டி அரசு பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது - 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதான பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.,
இந்த ரோந்து பணியின் போது கட்டைப் பையுடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்த பவித்ரன் என்ற இளைஞரை சோதனை செய்த போது கட்டைப் பையில் 5 பொட்டலங்கள் கஞ்சா இருந்ததைக் கண்டறிந்த போலிசார் பவித்ரனை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது வீட்டில் இருந்த 4 கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர்.,
கஞ்சா விற்பனை செய்து வந்தது தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments (0)
Facebook Comments