உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் கருத்தரங்கம்

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் கருத்தரங்கம்
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் கருத்தரங்கம்

ஜூலை-22

உசிலம்பட்டி 
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது.இதில் இத்துறையில் ஓய்வு பெற்ற  பேராசிரியர்கள் ராஜ்ஜியக் கொடி,ஜேம்ஸ் அண்ணாமலை,சின்னத்தம்பி,ஜெயராமன்,ராமன் என அனைவரும் கலந்து கொண்டனர். இத்துறையில்
ஓய்வு பெற்ற அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டது ஒரு முன் மாதிரி நிகழ்வாக அமைந்தது. தற்போதைய துறைத் தலைவர் செந்தில் குமார் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து தொகுத்து வழங்கினார்.
கல்லூரி முதல்வர் பால்ராஜ் முன்னிலை வகித்தார்.
முன்னாள் துணைவேந்தர்  முத்துச் செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வேல் முருகன் EDUCATR TRUST நன்றியுரை வழங்கினார்.
இத்துறை மாணவ/மாணவிகள் இக்கருத்தரங்கில் பங்கு பெற்றனர்.இயற்கை வளப் பாதுகாப்புக் குழு மாணவர்கள் வரவேற்பு அணிவகுப்பு நடத்தினர்.