தேனியில் சமூக நலத்துறை அதிகாரி திடீர் ஆய்வு அதிகாரிகளுக்கு அறிவுரை ஆலோசனை
தேனியில் சமூக நலத்துறை ஆணையர் ஆர்.லில்லி பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் மருந்தகங்கள்:
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்திடவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கிடவும் மாநில முழுவதும் முதல்வர் மருந்தகம் தொடங்க அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதன்படி தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் புதிதாக திறக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவதற்கான மருந்தகம் உரிமை பெறுதல், உள்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து, முதல்வர் மருந்தகம் அமைக்கப்படவுள்ள தேனி-சமதர்மபுரம், அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, போடிநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் புதிதாக தொடங்கப்படவுள்ள முதல்வர் மருந்தகம் முதற்கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை ஆணையர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர்.லில்லி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தியுள்ளார்கள்.
ஆய்வுக் கூட்டம்:
முன்னதாக, மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை ஆணையர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர்.லில்லி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மினி பேருந்துகள்:
இக்கூட்டத்தில் தேனி மாவட்டத்தில், புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க 34 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க 14.03.2025 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து, செயல்முறைப்படுத்தப்பட்டு, மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
வீட்டுமனை பட்டா:
மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் தகுதியின் அடிப்படையில், வீட்டுமனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசின் கண்காணிப்பு அலுவலர் சமூகநலத்துறை ஆணையர் ஆர்.லில்லி அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஐ.மகாலட்சுமி, பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ஆரோக்கிய சுகுமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சாந்தி, மாவட்ட சமூகநல அலுவலர் சியாமளா தேவி, வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments (0)
Facebook Comments