தோல்வி பயம் காரணமாக தேர்தல் கால பரிசு மழை அறிவிக்க ஸ்டாலின் அரசு தயாராகி வருகிறது அதிமுக தேர்தல் காலத்தில் மட்டும் மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சி அல்ல... ஆர் பி உதயகுமார் பேச்சு
தோல்வி பயம் காரணமாக தேர்தல் கால பரிசு மழை அறிவிக்க ஸ்டாலின் அரசு தயாராகி வருகிறது
அதிமுக தேர்தல் காலத்தில் மட்டும் மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சி அல்ல...
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு
மதுரை மாவட்டம் பாலமேடு நகர் கழகம் சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் VK குமார் செய்திருந்தார்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், கருப்பையா மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், அரியூர் ராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் லட்சுமி, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் மருதாயி , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மனோகர், அலங்காநல்லூர் பிரதிநிதி முரளி, வழக்கறிஞர் குருவித்துறை காசி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனை மற்றும் பயிற்சிகள் வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது,
சென்ற ஆண்டு உங்களுக்கு மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்காத ஸ்டாலின் அரசு, மகளிர் உரிமைத்தொகை ஆரம்பத்தில் தகுதி இல்லை என்று கூறிவிட்டு தற்போது தகுதி உள்ளதாக அறிவிக்கும் ஸ்டாலின் அரசு, தோல்வி பயம் காரணமாக தேர்தல் கால பரிசு மழையை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. மக்கள் அதை நம்பி ஏமாந்து விடக்கூடாது.
மேலும் என்றென்றும் மக்களுக்கு சேவையாற்றும் கட்சியாக அதிமுக உள்ளது. தேர்தல் காலத்தில் மட்டும் மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சி அதிமுக அல்ல என்றும் பேசினார்

Comments (0)
Facebook Comments