ஏழை எளிய மக்களின் மனதை அறிந்தவர் பிரதமர் மோடி டாக்டர் முத்துராமன் பேச்சு

ஏழை எளிய மக்களின் மனதை அறிந்தவர்  பிரதமர் மோடி டாக்டர் முத்துராமன் பேச்சு
ஏழை எளிய மக்களின் மனதை அறிந்தவர்  பிரதமர் மோடி டாக்டர் முத்துராமன் பேச்சு
ஏழை எளிய மக்களின் மனதை அறிந்தவர்  பிரதமர் மோடி டாக்டர் முத்துராமன் பேச்சு
ஏழை எளிய மக்களின் மனதை அறிந்தவர்  பிரதமர் மோடி டாக்டர் முத்துராமன் பேச்சு
ஏழை எளிய மக்களின் மனதை அறிந்தவர்  பிரதமர் மோடி டாக்டர் முத்துராமன் பேச்சு

29.11.22
சென்னை*

ஏழை எளிய மக்களின் மனதை அறிந்தவர் பிரதமர் மோடி டாக்டர் முத்துராமன் பேச்சு

சென்னை மாதவரம் அடுத்த மூலக்கடையில் உள்ள வியாபாரிகள் சங்க நலக்கூடத்தில் மத்திய அரசின் சிறு மற்றும் குரு நடுத்தர தொழில் முனைவோருக்கான சலுகைகள் மற்றும் வழிகாட்டுதல் குறித்து கடன் வழங்கும் முறை குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எம்எஸ் எம் இ புரமோஷன் கவுன்சிலின் தலைவர் டாக்டர் இ முத்துராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் 

இதில் வியாபார பெருமக்கள் கலந்து கொண்டு கடன் வாங்கும் முறை குறித்து தங்களது சந்தேகங்களுக்கானதெளிவான கேள்விகளை கேட்டனர். 

அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் சிறு குறு தொழில் மற்றும் கடன் வழங்கும் தொழிற்சங்கத்தின் தலைவர்  டாக்டர் முத்துராமன் 
அவர்கள் கலந்து கொண்டு தெளிவான விளக்கங்களை வியாபார பெருமக்களுக்கு அளித்தார் பாரதப் பிரதமர் மோடி ஜீ அவர்கள் ஏழை எளிய மக்களின் மனதை நன்கு அறிந்தவர் அவரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக மத்திய அமைச்சர் நாராயணன் டி ரானே அவர்களின் வழி காட்டுதல் படி இந்தியாவை மிகச் சிறந்த தொழில் நாடாக கொண்டு வரும் வகையில் மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு செயல் படுத்தி வருகிறது அதற்காக நான் ஒரு ஊழியனாக இருந்து இந்தியா முழுவதிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேரடியாக தொழில் முனைவோரை சந்தித்து வருகிறேன் அதற்காக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடன் தொடர்பு கொண்டு தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற வழிகாட்டுதல்களை செய்து வருகிறேன் ஏற்கனவே மதுரை பெங்களூர் ஓசூர் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி உள்ளேன் என்று டாக்டர் முத்துராமன் தெரிவித்தார் 

இதனை அடுத்து மத்திய அரசு  வியாபாரிகளுக்காக வழங்கப்படும் இந்த கடன் தொகைக்கு குறைந்த அளவு வட்டி மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும் இதனை வியாபார பெருமக்கள் தங்களது வியாபார நோக்குக்கு பெருமளவில் பயன்படுத்திக் கொண்டு வியாபார விருத்தி செய்து தங்களது தொழில் முன்னேற்றம் அடைய வேண்டுமென அவர் இந்த கலந்தாய்வு கூட்டத்தின் போது கேட்டுக் கொண்டார் 

மேலும் இந்தியாவின் வளர்ச்சி ஆனது தற்போது உலக நாடுகளில் வியப்படைய செய்துள்ளதாகவும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்திய பெருமக்கள் அதிக அளவில் உழைத்து கொண்டு இருப்பதாகவும் தொழில் முன்னேற்றத்தில் இந்தியா பெரும் லாபத்தை சந்திக்க இருப்பதாகவும் அது வியாபாரிகள் மூலமே நிறைவேற்றம் அடையும் எனவும் இந்திய பங்கு சந்தையில் வியாபாரிகளின் பங்களிப்பானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் எனவும் எனவே வியாபாரிகள் இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வியாபார நோக்கினை பயன் படுத்தி பெருமளவில் முன்னேற்றிக் கொள்ள வேண்டுமெனவும் அவர் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தின் போது கேட்டுக் கொண்டார்.

இந்த கூட்டத்தில் சென்னை மூலக்கடை வியாபாரிகள் சங்க தலைவர் ராமநாதன், பெரம்பூர் கணேசன் மற்றும் காமாட்சி பாண்டியன் உட்பட ஏராளமான சிறு மற்றும் குறுந்தொழில் முனையும் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.