பஞ்சமி நிலத்தை வாங்கி திருப்பிக் கொடுத்து விட்டேன் ஒபிஎஸ் ஆவேசம்

பஞ்சமி நிலத்தை வாங்கி திருப்பிக் கொடுத்து விட்டேன் ஒபிஎஸ் ஆவேசம்
பஞ்சமி நிலத்தை வாங்கி திருப்பிக் கொடுத்து விட்டேன் ஒபிஎஸ் ஆவேசம்

பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டி 

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் , தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது :  "பஞ்சமி நிலத்தை நான் வாங்கியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலமானது நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலம் தான். பஞ்சமி நிலமல்ல. நான் விலைக்கு வாங்கிய நிலத்தை, அதே நபரிடம் திரும்ப ஒப்படைத்து  விட்டேன். எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில்  இருந்து எனக்கு எந்தவிதமான சம்மனும் இல்லை.அதிமுகவில் நான், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் கூக்குரலாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை அதிமுகவில் இணைவதற்கு எந்த விதமான நிபந்தனையும் இல்லை. அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அஇஅதிமுகவுக்கு வாழ்வு. இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு தான் " இவ்வாறு பேசினார்.