உசிலம்பட்டி அருகே பேருந்து வசதி கண்ட கிராம மக்கள் குலவையிட்டு வரவேற்றனர்

உசிலை 

அக்டோபர் 4

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா எ கிருஷ்ணாபுரம் கிராமம் இந்த கிராமத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி பேருந்து வசதி போன்றவை இல்லாமல் இருந்து வந்தது இதனை கருத்தில் கொண்ட கிராமத்து பொதுமக்களும் மூன்றாவது வார்டு மெம்பர் சின்னமணி அவர்களும் அவரோடு முன்னாள் ராணுவ அதிகாரியான அமிர்தராஜ் அவர்களும் பைனான்சியர் வீரணன் அவர்களும் இணைந்து தொடர்ந்து அரசு அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் சந்தித்து மனு கொடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் விளைவாக இன்று மாலை 4 மணிக்கு அந்த கிராமத்திற்கு பேருந்து வசதி உசிலம்பட்டியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதனை கண்ட கிராமத்து மக்கள் குலவையிட்டு வரவேற்று டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தனர்