பெங்களூருவில் தேவர்ஜெயந்தி விழா கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் கொண்டாட்டம்
பெங்களூரில் தேவர் ஜெயந்தி விழா.
கர்நாடகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பெங்களூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழாவை நடத்தினர்.
கோபி ஏகாம்பரம்,
நாம் தமிழர் மோகன், இளங்கோவன்,
மணிக்கண்டா, ஜோசப், ஜீவா, சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.
தேவர் ஐயாவை சாதியவட்டத்திற்குள் அடக்கி அவரின் உண்மை வரலாற்றை மறைக்கும்
வேலையை
சில அமைப்பினர் செய்து வருகின்றனர்.
தேவர் ஐயா தமிழர்களின் சொத்து. சாதி, மதம் பாராமல் அவருக்கு மரியாதை செய்யவேண்டியது உலகத் தமிழர்களின் கடமையாகும்.
பெங்களூரில் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவை கர்நாடக தேவர் சங்கத்தினர் சிறப்பாக பெரிய அளவில் செய்து வருகின்றனர்.
தேவர் சங்கத்தினரை தவிர்த்து கர்நாடகத்தில் ஒரு தமிழ் அமைப்பு செய்வது கர்நாடகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மட்டுமே,
என்பதை அறிந்து,
கர்நாடத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கு தமிழ்நாட்டிலுள்ள முக்குலத்தோர் அமைப்பினர் மற்றும் பல்வேறு தமிழ்த்தேசிய உறவுகள் பாராட்டு
தெரிவித்துள்ளனர்.என்று கர்நாடகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கோபி ஏகாம்பரம் அறிக்கை விட்டுள்ளார்.
Comments (0)
Facebook Comments