உசிலம்பட்டியில் உலக சாதனை சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்

உசிலம்பட்டியில் உலக சாதனை சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்
உசிலம்பட்டியில் உலக சாதனை சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்
உசிலம்பட்டியில் உலக சாதனை சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்

*உசிலம்பட்டியில் சிலம்பம் சுழற்றி உலக சாதனை*

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜாக்கி உலக சாதனை அமைப்பு சார்பில் மாணவ மாணவயிர்களின் தனி திறன்களை உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அகாடமிகள்,  பள்ளிகள், அசோசியேஷன்கள் போன்ற பல்வேறு அமைப்புகளில் இருந்து  200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு
சிலம்பம், யோகா, கராத்தே, ஓவியம், ரங்கோலி, பரதம், சதுரங்கம் போன்ற பல்வேறு தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.

 ஜாக்கி உலக சாதனை அமைப்பின் இயக்குநர் ஜேகப் நிர்வாகிகள் எஸ்தர், ராஜூ, சீனிவாசன் ஆகியோரின் கண்காணிப்பில் உசிலம்பட்டி விஷன் பவுண்டேசன் சிலம்பம் அகாடமியின் சார்பில் மாஸ்டர் ராகேஷ் மற்றும் 17  மாணவர்கள் 76 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிலம்பம் சுழற்றி புதிய சாதனை நிகழ்த்தி ஜாக்கி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அங்கீகாரம் பெற்றனர். 

இந்த உலக  சாதனை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள்,  கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஷன் பவுண்டேசன் தலைவர் பொன்ராம், நிர்வாகி செல்வராணி , நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் பிரதீப்குமார் செய்திருந்தார். இந்த நிகழ்வில் பெற்றோர்கள் பொது மக்கள்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.