உசிலம்பட்டியில் போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை,இருசக்கர வாகனங்களுக்கு புதிய கட்டுபாடு
மதுரை மாவட்டம்:
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் மக்கள்தொகை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதனை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலும் அதிகமாக ஏற்படுகின்றது. உசிலம்பட்டியில் பிரதான சாலையில் உள்ள சில திருமணம் மண்டபத்தினாலும் போக்குவரத்து நெரிசல் என்பது இதுவரை கட்டுபடுத்த முடியாத பெரும் சவாலாக உள்ளது.
இதனை தொடர்ந்து உசிலம்பட்டி போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து ஆய்வாளர் திரு. ஆறுமுகம் தலைமையிலும் அவரது குழு பேரையூர் பிரதான சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த சாலைகள் ஓரத்தில் கயிறு வேலிக்குள் அனைத்து இருசக்கர வாகனங்கள் நிற்கும் படி அமைப்பை ஏற்படுத்தினர்.
சாலையில் விதி மீறல் முறையில் இனி மக்கள் இருசக்கர வாகனங்கள் நிறுத்த கூடாது என்றும், மீறினால் முதலில் எச்சரித்தும், மீண்டும் அதே தவரை செய்தால் போக்குவரத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சியையும், இனி உசிலம்பட்டியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து காவல்துறையின் இச்செயல் உசிலம்பட்டி மக்களுக்கிடையே பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
P. வேல் முருகன்
தமிழ் ஒளி செய்தியாளர்.
+919159555110
Comments (0)
Facebook Comments