உசிலம்பட்டி கண்மாய் சுத்தம் செய்ய முன் வந்த செட்டியார் பேரவை தலைவர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கண்மாயில் சீமை கருவேலம் மரம் மற்றும் குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பராமரிப்பு இன்றி நீர் ஆதாரம் பாதிப்படையும் வகையில் இருந்த சூழல் அறிந்து உசிலம்பட்டியை சார்ந்த 58-கிராம கால்வாய் உசிலம்பட்டி வட்டார திட்ட இளைஞர்கள் குழு சார்பில் கண்மாய் கடந்த ஒரு வாரகாலமாக சுத்தம் செய்து சீமைகருவேல மரங்கள் அகற்றப்பட்டு
 வருகிறது. 
இளைஞர்களின் தன்னார்வ பணியை பாராட்டி உசிலம்பட்டி கண்மாய் சுத்தம் செய்ய பொதுமக்கள் பலரும் உதவிகள் செய்து வருகின்றனர்.
இன்று உசிலம்பட்டி வந்த தேசிய செட்டியார்கள் பேரவை தலைவரும் பாலமுத்தழகு குழுமத்தின் நிறுவனருமான P.L.A.ஜெகநாத்மிஸ்ரா அவர்களிடம் இளைஞர்கள் நிதி உதவி கேட்டதன் அடிப்படையில் இளைஞர்களின் முயற்சியை பாராட்டி உடனடியாக ரூபாய்: 10,000-ம் 
வழங்கினார்.

இதுகுறித்து P.L.A.ஜெகநாத்மிஸ்ரா 
அவர்களிடம் நமது தமிழ்ஒளி செய்தியாளர் கேட்டதற்கு 
 உசிலம்பட்டி மண் மீதும் உசிலம்பட்டி 
மக்கள் உள்ள பாசத்திற்க்காகவும், 
உசிலம்பட்டி மண்ணின் முன்னேற்றத்திற்கு எனது பங்களிப்பு எப்போதும் இருக்கும் என்று பெருமிதத்தோடு கூறியது இளைஞர்கள் மற்றும் உசிலம்பட்டி மக்களிடையே பாராட்டை பெற்றுவருகிறது.

உசிலை.P.M.தவசி -தமிழ் ஒளி செய்திகள்.