மதுரை மக்கள் பிரச்சினையில் முதல்வர் தலையிட வேண்டும் பசும்பொன் பாண்டியன் வேண்டுகோள்

மதுரை மக்கள் பிரச்சினையில் முதல்வர் தலையிட வேண்டும் பசும்பொன் பாண்டியன் வேண்டுகோள்
மதுரை மக்கள் பிரச்சினையில் முதல்வர் தலையிட வேண்டும் பசும்பொன் பாண்டியன் வேண்டுகோள்

*அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன்

மதுரையில் மக்கள் போராட்டம் முதல்வர் நேரடியாக தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும்*.                 

 *மதுரை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது இதற்காக விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப் பட்டு வருகிறது இந்த நிலையில் சின்ன உடைப்பு பகுதியில் கட்டிடங்களை ,வீடுகளை அகற்றுவற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்களும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளும் தங்களது வகுப்புக்களை புறக்கணித்து போராடி வருகின்றனர், மாநகராட்சி எல்லைப் பகுதிக்குள் 3செண்ட் இடத்துடன் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறார்கள், அதைப்போல மதுரை பரவை சத்திய மூர்த்தி நகரில் காட்டு நாய்க்கன் மக்களும் பள்ளி மாணவ,மாணவிகளும் தங்களுக்கு நிறுத்தப்பட்ட சாதிச் சான்றிதழை கேட்டுப் போராடி வருகிறார்கள், பீ. பீ குளம் முல்லை நகர் மக்கள் பட்டா கேட்டு தொடர்ந்து போராடி வருகிறார்கள், அதைப்போல மேலூர் பகுதியில் வேதாந்தா நிறுவனம் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க உள்ளதாக மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு உள்ளது மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் 5000ஏக்கர் பரப்பளவில் சுரங்கம் அமைத்து டங்ஸ்டன் கனிமம் எடுக்க வேதாந்தா குழுமத்தில் துணை நிறுவனமான இந்துஸ்தான்சின்ஸ் என்னும் நிறுவனத்திற்கு அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் 50 இடங்களில் சோதனை நடந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது, டங்ஸ்டன் கனிமம் எடுக்க அனுமதித்தால் முத்துவேல்பட்டி, கிடாரிபட்டி,எட்டிமங்கலம், அரிட்டாபட்டி,செட்டியார்பட்டி,நாயக்கர் பட்டி,வெள்ளாளபட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதோடு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் தளம் பாதிக்கப்படும் ஆகவே திராவிடமாடல் அரசு டங்ஸ்டன் கனிமம் எடுக்க அனுமதிக்க கூடாது என்றும் வேண்டுகோள் வைப்பதோடு மதுரை மாநகரத்தில் சாலைகள் குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது மக்கள் போராட்டம் மதுரையைச் சுற்றி நடைபெறுகிறது, மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் தூங்குகிறது,திராவிட மாடல் அரசின் முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரடியாக மதுரை மக்களின் கோரிக்கைகளை சுமூகமாக நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டுகிறேன்.*