உசிலம்பட்டியில் அரிவாள் மனையால் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்த தொழிலாளி
உசிலை மார்ச் -5
அரிவாள் மனையால் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்த தொழிலாளி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வில்லாணி இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மொக்கசாமி இவரது மகன் விஜயகுமார் வயது 29 திருமணமாகாதவர் லாரி ஓட்டுநர் ஆக வேலை செய்து வந்தார் இவரின் தாய் தந்தையார் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், தனியாக வசித்து வந்தவர்,
கடந்த 2 நாட்களாக கெட்ட கனவு வந்ததாகவும், யாரோ கூப்பிடுவதாகவும் பிதற்றி வந்ததார் ,
நேற்று காலை ஒத்தப்பட்டி சாலையிலுள்ள அவரது அண்ணன் ராமு என்பவருடைய வீட்டிற்கு வந்துவிட்டு , கோவிலுக்கு சென்றும், மசூதியில் சென்றும் வழிபாடு செய்துவிட்டுவந்தார்
ஏற்கனவே மனநல பாதிப்பில் இருந்துவந்த விஜயகுமார்
வீட்டில் யாரும் இல்லை இரவு 09.45 மணி அளவில்,
சமையலறையில் இருந்த அரிவாள் மனையால்
தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்டார்.தகவல் அறிந்து வந்து அக்கம் பக்கத்தினர் விஜயகுமாரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்
சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.
இறந்தவரின் உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments