பத்தாம்வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

பத்தாம்வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பத்தாம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் உயர் நீதிமன்றத்திலிருந்து தடையும் ஏற்பட்டதால் தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது.

மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும் வருகை நாட்களை கணக்கிட்டு 20 சதவீதமும் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

உசிலை.P.M.தவசி