சமூக ஆர்வலருக்கு குவியும் வாழ்த்து
ஆதரவின்றி கிடந்த பார்வைக்குறைபாடு உடைய முதியோர்களை உறவினர்களிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலர் மற்றும் காவல் துறையினர்
டிச-08: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வள்ளிமயில்,முத்தரசன் என்ற பார்வைக்குறைபாடு உடைய முதியோர்கள் இருவரும் சில நாட்களாக ஆதரவின்றி தவித்து வந்தனர். அவர்களை பெரியகுளம் தென்கரை காவல் ஆய்வாளர் முத்துபிரேம் சந்த் அவர்கள் வழிகாட்டலின்படி, காவல் சார்பு ஆய்வாளர் ஜீவானந்தம் அவர்கள் உதவியுடன் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் முதியோர்களை மீட்டு விசாரித்ததில் அவர்கள் வடுகபட்டியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.உடனே முதியோர்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்வை பொதுமக்கள் பாராட்டினர்.
P.M.தவசி
தமிழ் ஒளி செய்தியாளர்
Comments (0)
Facebook Comments