தேனி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கனரா வங்கி சார்பில் இலவச சுய தொழில் பயிற்சி

தேனி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கனரா வங்கி சார்பில் இலவச சுய தொழில் பயிற்சி
தேனி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கனரா வங்கி சார்பில் இலவச சுய தொழில் பயிற்சி

*தேனியில் இலவச சுயத்தொழில் பயிற்சி சிறந்த வாய்ப்பு!*

*தேனி மாவட்டம், கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் (Canara Bank RSETI) சார்பில், சுயதொழில் தொடங்கும் நோக்கில் ஒரு முக்கியமான இலவச பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*

*அதன்படி, 29.12.2025 முதல் மிஷின் ஆரி & சார்தோஷி எம்ப்ராய்டரி குறித்த இலவச தொழில்முறை பயிற்சி நடைபெற உள்ளது.*

*இந்த பயிற்சியில்,ஆரி வேலை மற்றும் சார்தோஷி எம்ப்ராய்டரி அடிப்படை முதல் மேம்பட்ட முறைகள் வரை*

*துணிகளில் நவீன வடிவமைப்புகள் செய்யும் நுட்பங்கள்*

*திருமண உடைகள், சுடிதார், லேஹங்கா, பிளவுஸ் போன்றவற்றில் வடிவமைப்பு செய்வது*

*வீட்டிலிருந்தே சுயதொழில் தொடங்கும் வழிமுறைகள்*

*தொழில் தொடங்க வங்கி கடன், அரசு உதவித் திட்டங்கள் குறித்த தகவல்கள்*

*ஆகியவை விரிவாக கற்றுத்தரப்பட உள்ளது.*

*இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், டிசம்பர் 29-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.பயிற்சி முழுமையாக இலவசம் என்பதால், பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.*

*???? மேலும் தகவல் மற்றும் பதிவு செய்ய: 88703 76796*