ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கிணற்றில் மிதந்து யோகாசனம் செய்த நபர்
*தேனி: ரஜினிக்காக கிணற்றில் மிதந்து யோகாசனம் செய்த நபர்*
*தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் பகுதியில் இன்று (12.12.2025) நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வித்தியாசமான நிகழ்வு ஒன்று நடந்தது.*
*தேவாரம் பகுதியைச் சேர்ந்த தளபதி விஜயன் எனும் நபர், சின்னமனூரில் உள்ள ஒரு தோட்டக் கிணற்றில் தண்ணீரில் மிதந்தபடி சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக யோகாசனம் மேற்கொண்டார்.*
*ரஜினிகாந்த் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆசையுடன் அவர் தொடர்ந்து இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*
*இந்த அபூர்வ யோகாசனம் அப்பகுதி மக்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்தது.*

Comments (0)
Facebook Comments