மதுரையில் வெள்ளாளர் வேளாளர் அரசியல் அதிகார விழிப்புணர்வு மாநாடு
டிசம்பர் 15
மதுரை பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகே வேளிர் மக்கள் கட்சியின் சார்பாக வெள்ளாளர்-வேளாளர் அரசியல் அதிகார மீட்பு மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.
பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முக்குலத்தோர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பூவை ஜெயக்குமார் தேவர் கட்சி சார்பாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர், வேளிர் மக்கள் கட்சியின் நிறுவனர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அரசியலில் மென்மேலும் வளர வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Comments (0)
Facebook Comments