அரசு கள்ளர் பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
உசிலம்பட்டி ஏப்-24
மாணவர் சேர்க்கைத் திருவிழா
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டது அதனால் மாணவர்கள் இப்பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் உசிலம்பட்டி அருகே உள்ள பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைத் திருவிழா இன்று தொடங்கியது.
இன்று (24/04/23) திங்கள் கிழமையன்று 2023 - 2024 கல்வி ஆண்டுக்கான
6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்குரிய தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கைத் திருவிழா தொடங்கியது.
பள்ளி தலைமை ஆசிரியர் திரு.மு.சுப்பிரமணியன் அவர்கள் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை பெற்றோர்களிடம் வழங்கி சேர்க்கைத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
இன்று ஆறாம் வகுப்பு தமிழ் வழியில் 20 மாணவர்களும் ஆங்கில வழியில் 14 மாணவர்களுமாக மொத்தம் 34 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து சேர்க்கை நடைபெறும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments (0)
Facebook Comments