உசிலம்பட்டியின் அடையாளத்தை மாற்றும் மதுக்கூடங்கள்

உசிலம்பட்டியின் அடையாளத்தை மாற்றும் மதுக்கூடங்கள்.

உசிலம்பட்டியில் முன்பெல்லான் கன்மாய்கரை அருகில் வா, தேவர் சிலை அருகில் வா,

பேருந்து நிலையம் அருகில் வாருங்கள் என்று அடையாளம் குறித்து காண்பிக்கப்பட்ட உசிலம்பட்டி தற்போது மதுபான கடைகளை மையமாக வைத்து அடையாளம் காண்பித்து வருகின்றார்கள் என சமூக ஆர்வலர்கள் குமுறல்..

சாலை அருகில் உள்ள மதுபான கூடங்களையும், தனியார் மதுபான விடுதிகளையும் உசிலம்பட்டி ஊரின் மையப்பகுதியில் இருந்து நிரந்தரமாகவோ அல்லது உசிலம்பட்டி ஊரின் வெளிப்புறத்திற்கு மாற்றம் செய்து உசிலம்பட்டி ஊரின் கலாச்சார பெருமையே காத்திட பொதுமக்கள் கோரிக்கை.

புன்னியபூமி, கலாச்சார பூமி, என புகழ் பெற்ற நகரமாக இருந்து வந்த உசிலம்பட்டி சமீபகாலத்தில் அரசின் அலட்சியத்தால் நெடுஞ்சாலை அருகாமையிலும், ஊரின் மையப்பகுதிகளிலும் மதுபான விடுதிகளை திறந்துவைத்து உசிலம்பட்டி ஊரின் அழகையையும் கலாச்சார சீர்கேட்டையும் உருவாக்கி வருவதாகவும்..

மதுரை நெடுஞ்சாலையில் உள்ள 

தனியார் மதுபானகூடங்களையும், தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுபான கடையையும் அகற்ற கோரி சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்..

குடிகாரர்களின் கூடாரமாகமாறி வரும் உசிலம்பட்டி நகர் பகுதியை மீட்டுத்தரும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

.. பதிவு..

P.M.தவசி

தமிழ் ஒளி செய்தியாளர்