கா்நாடகாவிலிருந்து வந்த47தமிழா்கள் தமிழக எல்லையில் தவிப்பு

கா்நாடகாவிலிருந்து வந்த47தமிழா்கள் தமிழக எல்லையில் தவிப்பு
கா்நாடகாவிலிருந்து வந்த47தமிழா்கள் தமிழக எல்லையில் தவிப்பு

05.05.2020,


கர்நாடக சென்ற 45 தமிழர்கள் மாநில எல்லையில் இறக்கி விடப்பட்டனர்: திருவண்ணாமலை ஆட்சியர் பதிலளிக்காததால் ஒசூர் அரசு கலைக்கல்லூரியில் தங்கவைப்பு

கர்நாடக மாநிலத்தில் ஊரடகங்கில் சில தளர்வுகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் வெளி மாநிலத்தவர்களை நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்று நாட்களில் அந்தந்த மாநில எல்லைகள் வரை இலவசமாக அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து சிவமொகாவில் துக்க நிகழ்வில் பங்கேற்க சென்ற 45 தமிழர்கள் ஊரடங்கு காரணமாக வெளியில் வரமுடியாமல் தவித்த நிலையில்

கர்நாடக அரசு அவர்களை இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜூஜூவாடி என்னும் தமிழக மாநில எல்லையில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

45 பேரின் விபரங்கள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்ட நிர்வாகத்தினரின் பதிலுக்காக தமிழக மாநில எல்லையில் 45 பேரும் காத்திருக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் இதுவரை எந்த பதிலும் இல்லாததால் அனைவரும் ஒசூர் அரசுக்கலைக்கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 ஒசூர் அரசுக்கலைக்கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்டத்தினர் 47 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் சர்க்கரை நோயாளிகள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பால், மாத்திரை உள்ளிட்டவைகள் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளான நிலையில்,

ஒசூர் எம்எல்ஏ சத்யா பால்,பிரட், மாத்திரை, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நேரடியாக உதவி வரும்நிலையில்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 45 பேரும் தங்களின் மாவட்டத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், பின்னர் அரசு மேற்க்கொள்ளும் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க இருப்பதாகவும்

திருவண்ணாமலை ஆட்சியர் உடனடியாக அனுமதியளிக்க வேண்டுமென கர்நாடகாவிலிருந்து திரும்பிய 47பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.