உசிலம்பட்டியில் சக்கரவர்த்தி வித்யாலயா வில் பரதநாட்டிய பள்ளி துவக்கம்

உசிலம்பட்டியில் சக்கரவர்த்தி வித்யாலயா வில் பரதநாட்டிய பள்ளி துவக்கம்
உசிலம்பட்டியில் சக்கரவர்த்தி வித்யாலயா வில் பரதநாட்டிய பள்ளி துவக்கம்

உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று 14.07.25 செவ்வாய்க்கிழமை காமதேனு விருட்சாலயம்- பரதநாட்டியம் மற்றும் கர்நாடக சங்கீத பள்ளியின் குரு. திருமதி . A.S. தன செல்வி ,
நாட்டிய கலா சிரோமணி/ பாரத கலைமணி அவர்களால் முறைப்படி மாணவிகளுக்கு பரதநாட்டியம் மற்றும்  கர்நாடக சங்கீத துவக்க விழா பள்ளித் தாளாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
 பள்ளி தலைமை ஆசிரியர் லயன் அமுதப்பிரியா அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினை  துவக்கி வைத்தார்கள்.
 சிறப்பு விருந்தினர்களாக மம்மி டாடி ரெடிமேட்ஸ் உரிமையாளர் நிஜாமுதீன்/ தமிழ் ஒளி தொலைக்காட்சி இயக்குனர் தமிழரசன்/ பெண்கள் தொழில் முனைவோர் தொண்டு நிறுவன இயக்குனர் ராஜேஸ்வரி/ வாஸ்து வல்லுனர் அலெக்ஸ் பாண்டியன்  மற்றும்பெற்றோர்கள்/ ஆசிரியர்கள் மாணவர்களும்  கலந்து கொண்டார்கள்.