பசுக்காரன்பட்டியில் கப்பைக்கிழங்கு அமோகமாக விளைச்சல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பசுக்காரன்பட்டி இது வானம் பார்த்த பூமியாக விளங்குகிறது பருவகாலத்தில் மட்டும் விவசாயம் செய்து வருகின்றனர் இந்நிலையில் பசுக்காரன்பட்டியைச் சேர்ந்த சுஜித்குமார் என்பவர் கப்பைக் (குச்சி) கிழங்கு குச்சிகளை சுமார் 8 மாதங்களுக்கு முன்பு நடவு செய்தார். இதற்கு இயற்கை உரங்களையும் இயற்கை பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்தி வந்தார். தற்போது இது நன்கு விளைந்த நிலையில் அறுவடையானது.இதுகுறித்து கருத்து தெரிவித்த சுஜீத்குமார் குறைந்த நீரில் நல்ல விளைச்சலும் நல்லவருவாயும் தரக்கூடிய பயிர் விவசாயிகள் இப்படியான பயிர்களை தண்ணீர் பிரச்சினை இன்றி பயமின்றிபயிரிடலாம் என்று கூறினார்
Comments (0)
Facebook Comments