தங்கப்பதக்கத்தை அள்ளி குவித்த அரசு கள்ளர் பள்ளி மாணவர்கள்

தங்கப்பதக்கத்தை அள்ளி குவித்த அரசு கள்ளர் பள்ளி மாணவர்கள்
தங்கப்பதக்கத்தை அள்ளி குவித்த அரசு கள்ளர் பள்ளி மாணவர்கள்

 மதுரை மாவட்ட வருவாய் அளவில்  மாணவியர்களுக்கான  டேக்வாண்டோ போட்டி மதுரை டாக்டர்  எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் மெய்க்கிழார்பட்டி அரசு கள்ளர் மேல் நிலைப் பள்ளியில் இருந்து 10 மாணவிகள் பங்கு பெற்று 9 மாணவிகள் தங்க பதக்கமும், 1மாணவி வெண்கல பதக்கமும் பெற்று சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்கள்  என்பதை பள்ளி நிர்வாகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டது . வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது