பொறுப்புக்கு வருபவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் திருச்சி கல்யாணராமன்

பொறுப்புக்கு வருபவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் திருச்சி கல்யாணராமன்
பொறுப்புக்கு வருபவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் திருச்சி கல்யாணராமன்

*பொறுப்புக்கு வந்து விட்டால் பண்போடு நடந்து கொள்ள வேண்டும்*

*ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேச்சு*
 
பொறுப்புக்கு வந்து விட்டால் பண்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார் இது பற்றிய விவரம் வருமாறு

மதுரை தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு  மதுரை  தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராதா தியாகராசர் அரங்கில் நடைபெற்று வருகிறது இரண்டு வரம் என்ற தலைப்பில் கலைமாமணி திருச்சி கல்யாணராமன்   பேசியதாவது.
 நாம் எப்படி வாழ வேண்டும் என்று சொல்வது ராமாயணம். பிறரிடம் நாம் எப்போதும் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல வேண்டும். 

கடமையை செய்வதற்கெல்லாம் பாராட்டு விழா நடத்தக் கூடாது. ஆண்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம். பெண்கள் அதனை காட்டிக் கொள்ள மாட்டார்கள். எப்போதும் நாம் சொல்வதை பிறர் எதிர்பார்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. 

சமுதாயத்தின் சொத்து ராமாயணம். இந்த உலகில் யாரையும் நிர்பந்திக்க கூடாது.அப்படி முயற்சித்தால் தோற்றுப் போய் விடுவோம். 

யாரிடத்திலும் சட்டம் நியாயம் செல்லாது. பிரியத்தோடு அன்போடு சொன்னால்தான் அது வெல்லும். உலகத்தில் எங்கு பாராட்டு பெறுவதை விட சிதம்பரத்தில் பாராட்டு வாங்கினால் தான் அது சிறப்பாகும். 

பொறுப்பு பதவி ஆகியவற்றிற்கு வந்து விட்டால்  பண்போடு நடந்து கொள்ள வேண்டும். அருணகிரிநாதர் ராமருக்கு தாலாட்டு பாடல் பாடினார். கூனி கைகேயி இல்லை என்றால் ராமாயணம் இல்லை.சகுனி இல்லை என்றால் மகாபாரதம் இல்லை. உலகத்தில் பொல்லாதவர்கள் இருந்தாலே கஷ்டம் தான். சிந்திக்கிறேன் சேவிக்கிறேன் என்கிறார் அருணகிரிநாதர்.யாராவது ஏதாவது சொன்னால் அது நன்மை பயக்குமா என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டும். எதையும் பதட்டத்தோடு செய்யக்கூடாது. கைகேயியை பூரண நிலாவோடும் சகுனிய கேதுவோடு ஒப்பிட்டான் கம்பர். 

உலகில் குரு சொன்னால் நாம் கேட்க வேண்டும். தாய் தந்தை சொன்னாலும் அதை வேத வாக்காக நினைக்க வேண்டும். கூனி கைகேயி சகுனி கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் நமக்கு ஒருவன் சொல்வது பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விட வேண்டும். பிரச்சினையை பெரிதாக்க கூடாது. எதையும் அணுகுமுறையோடு செய்ய வேண்டும்.  முத்துக்குளிக்க போகும்போது நண்டு நட்டுவாக்காலி எல்லாம் வரும் நாம் முத்தை மட்டும் எடுக்க வேண்டும் என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர். எது நல்லது என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.


இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார். சொற்பொழிவு வருகிற 16-ஆம் தேதி வரை மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை  நடக்கிறது 

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.