உசிலம்பட்டியில் தனியார் வாகனங்கள் அட்டூழியம் திமுக நிர்வாகி இளமகிழன் புகார்

உசிலம்பட்டியில் தனியார் வாகனங்கள் அட்டூழியம் திமுக நிர்வாகி இளமகிழன் புகார்
உசிலம்பட்டியில் தனியார் வாகனங்கள் அட்டூழியம் திமுக நிர்வாகி இளமகிழன் புகார்

 13/06/2024 

உசிலம்பட்டி 

திமுக வின் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளவர் இளமகிழன் தனியார் பேருந்துகள் தொடர்ந்து உசிலம்பட்டி பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனங்களை ஓட்டி அவ்வப்போது விபத்துக்களை மும் ஏற்படுத்தி வருகின்றனர் இது குறித்து இளமகிழன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில்
மதுரையில் இருந்து தேனி,கம்பம் செல்லும் தனியார் பேருந்துகள் மிக வேகமாகவும் அவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு செல்வதால் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் வாரம் இருமுறை விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது,ஆகவே தனியார் பேருந்துகளில் வேகத்தை குறைத்து போட்டி இல்லாமல் பொதுமக்களை அச்சுறுத்தாமல்  வாகனங்களை ஓட்டிச் செல்ல வலியுறுத்தியும் அவற்றை மீறி வேகமாக செல்லும் தனியார் பேருந்துகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் நேரில் சென்று புகார் மனு அளித்த போது, இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்,தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட அனைவருக்கும் புகார் மனுக்களை இளமகிழன் சார்பில் கொடுக்கப்பட்டது இவருடன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்…