ஓசூர் அருகே பள்ளி மாணவர்களின் துள்ளல் நடனம்

ஓசூர் அருகே பள்ளி மாணவர்களின் துள்ளல் நடனம்
ஆண்டு விழாவில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் பள்ளி நிர்வாகம்
ஓசூர் அருகே பள்ளி மாணவர்களின் துள்ளல் நடனம்
ஓசூர் அருகே பள்ளி மாணவர்களின் துள்ளல் நடனம்

ஓசூர் அருகே
குருகுலம் பள்ளியில் ஆண்டு  குதூகலமாக நடனம் ஆடி அசத்திய மாணவர்கள்.

 

ஓசூர் அருகே  குருகுலம் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம்ஓசூர் அடுத்த தேன்கனிகோட்டை, குருகுலம் குளோபல் ரெசிடென்ஷியல் உயர் நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் டாக்டர், கணபதி ரெட்டி
 தலைமை தாங்கினார். பள்ளியின் துணை தலைவர் நர்சி ரெட்டி, இயக்குநர் ராம்பிரசாத் ரெட்டி, புஷ்பா ரெட்டி, கல்வியாளர் மதன்கோபால், எழுத்தாளர் விக்னேஷ் சுகுமாரன் ஆகியோர்
 முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் காயத்திரி  வரவேற்றார். 

கல்வியாளர் பேராசிரியர் ராதாகிருஷ்ணா குத்து விளக்கு ஏற்றினார். தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகன், போலிஸ் இன் ஸ்பெக்டர் கணேஷ் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

.விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு  பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது.

இங் விழாவில் முக்கிய பிரமுகர்கள் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் தனலட்சுமி  நன்றி கூறினார்.