பாப்பா பட்டியில் உயிர்ப்பலி வாங்கும் விஷவாயு கிணறு அதிகாரிகள் அலட்சியம் பீதியில் பொதுமக்கள்
உசிலை மார்ச் 3
பாப்பா பட்டியில் உயிர்ப்பலி வாங்கும் விஷவாயு கிணறு அதிகாரிகள் அலட்சியம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது பாப்பாபட்டி
இந்த பாப்பாபட்டி மாசித் திருவிழா பெட்டி எடுப்பு திருவிழா என்பது பிரசித்தி பெற்ற ஒன்றாகும்
பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பாதையில் பழங்காலத்தில் பொதுமக்கள் பயன்பயன்படுத்திய குடிதண்ணீர் கிணறு ஆகும் கடந்த 40 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் உள்ள யாரும் இதனை பயன்படுத்துவது கிடையாது
இந்த நிலையில் இந்த கிணறு அருகில் உள்ள பொதுமக்கள் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுவதோடு துர்நாற்றம் வீசுகிறது இந்த நிலையில் நேற்று காலை பசுமாடு ஒன்று இந்த கிணற்றில் வீழுந்து விட்டது தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இக்கிணற்றில விச வாயு இருப்பதாக சொல்லிவிட்டு போய்விட்டனர் கிணற்றுக்குள் விழுந்த மாடு செத்து மிதந்தது
இதனால் மேலும் அச்சம் அடைந்த கிராமமக்கள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்
Comments (0)
Facebook Comments