பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தேனி மாவட்ட தமிழக காவல்துறை
ஏப்ரல் -20
தேனி
வளர்ந்துவரும் அறிவியல் வளர்ச்சி நாகரீக வளர்ச்சி மற்றும் மனிதர்களின் மன மாற்றம் பல்வேறு வகையான போதை கலாச்சாரம் போன்ற காரணங்களால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களின் பாதுகாப்பு இன்மை காரணமாக நாள் தோறும் புதிது புதிதாக குற்றச்செயல்கள் அரங்கேறி வருகிறது
இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை பல்வேறு வகையான சீர்திருத்தங்களையும் எச்சரிக்கைகளையும் வழங்கி வருகிறது அதன்தொடர்ச்சியாக பொதுமக்கள் கூடும் இடங்களில் குறிப்பாக வணிக வளாகங்கள் பேருந்து நிலையங்களில் தேனி மாவட்ட காவல்துறையினர் செல்போன்மூலம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவலன் ஆப்ஐ இன்ஸ்டால் செய்து கொடுத்து அதன் விளக்கங்களையும் வழங்கி வருகின்றனர் இது பொதுமக்கள் மற்றும் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுவருகிறது
Comments (0)
Facebook Comments