உசிலம்பட்டியில் கூண்டோடு காலியாகிறதா திமுக கூடாரம்???

உசிலம்பட்டியில் கூண்டோடு காலியாகிறதா திமுக கூடாரம்???
உசிலம்பட்டியில் கூண்டோடு காலியாகிறதா திமுக கூடாரம்???

உசிலை ஜன 23

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள திமுகவில் தொடர்ந்து உட்கட்சி பூசல் நிலவிவந்தது கடந்த உள்ளாட்சி தேர்தலில் அது வெளிப்படையாக எதிரொலித்தது என்பது அனைவரும் அறிந்ததே தலைமைக் கழகம், மாவட்ட செயலாளர், நகரச் செயலாளர் , ஒன்றிய செயலாளர் என ஒவ்வொரு தலைமையும் தனித்தனியாகவே இயங்கி வருகிறது. 

குறிப்பாக இதுவரை ஒருமுறை கூட உசிலம்பட்டி யில் திமுக வெற்றி பெற்றதில்லை அதனால் அத்தொகுதி பொதுமக்கள் நலனில் திமுக மக்கள விரோதப்போக்கை கடைப்பிடித்து வந்ததாக பொதுமக்கள் பலரும் குற்றம்சாட்டி வந்தனர் 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கூடாது என அமைச்சர் ஒருவரே வெளிப்படையாக கூறியதாகவும் தகவல் பரவியது

இந்நிலையில் ஆரம்பகால முதலே திமுகவில் அங்கம் வகித்து வந்த திமுக தலைமை கழக உறுப்பினர் சோலை ரவி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய் உசிலை நகர்மன்ற தலைவர் சகுந்தலா என பலரும் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்  இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில் விரைவில் உசிலம்பட்டியில் பல்வேறு திருப்புமுனைகள் நிகழும் எனவும் திமுகவின் ஒட்டுமொத்த கூடாரமும் காலியாகும் என உறுதிபட தெரிவித்தார்.