கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சென்னை ஐஐடி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்கள் உற்சாகம்
கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் IIT மதராஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) மதராஸ் சார்பில், அதன் BS பட்டப்படிப்பு திட்டம் (BS Degree Program) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த முக்கிய நிகழ்வில், IIT மதராஸ் BS பட்டப்படிப்புத் திட்டத்தின் தலைவர் கமலா ராமகிருஷ்ணன் மற்றும் பிரோகிராம் மேலாளர் . கோஹிலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர்கள் IIT மதராஸ் BS Degree Program, School Connect முயற்சிகள், மற்றும் மாணவர்கள் பெறக்கூடிய கல்வி வாய்ப்புகள் குறித்து விரிவான விளக்கங்களைச் சந்திப்பினருக்கு அளித்து, பலரின் சந்தேகங்களுக்குப் பதிலளித்தனர். பள்ளி மட்டத்திலேயே IIT கல்விப் பாதையை மாணவர்கள் அணுக இந்தத் திட்டம் எவ்வாறு உதவுகிறது என்பதையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து, IIT மதராஸ் வழங்கும் 8 வார சான்றிதழ் படிப்பை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கும், BS பட்டப்படிப்பில் சேர்வதற்கான தகுதித் தேர்வில் (Eligibility Exam) தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அகிலன்
ஹரிஷ்
நரேஷ் பாலாஜி
சாகேத்
கிஷோர்காந்த்
விஜய் ஆலபன்
கார்த்திக் குமார்
இவர்கள் அனைவரும் பள்ளி நிர்வாகம் மற்றும் பங்கேற்பாளர்களால் பாராட்டப்பட்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பள்ளி மட்டத்திலேயே IIT கல்விப் பாதையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் இந்தச் சிறப்பான முயற்சிக்கு அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
மாணவர்கள் தங்கள் எதிர்காலக் கல்வி வாய்ப்புகளைத் தெரிந்துகொள்ள இந்த நிகழ்வு பெரும் உதவியாக இருந்தது.

Comments (0)
Facebook Comments