திருப்பரங்குன்ற விவகாரம் கலவர முயற்சியா வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கண்டனம்

திருப்பரங்குன்ற விவகாரம் கலவர முயற்சியா வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கண்டனம்
திருப்பரங்குன்ற விவகாரம் கலவர முயற்சியா வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கண்டனம்

*அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் அறிக்கை*

மதுரை திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்ய முயற்சிக்கும் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட சங்கபரிவார் அமைப்புக்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழகத்தில் பொது அமைதியை குலைத்து சட்டம் ஒழுங்கை சீர்க்ககுலைத்து வன்முறை களமாக்கி அதில் அரசியல் லாபமடைய முயற்சிக்கும் மத தீவிரவாத கூட்டத்தை ஒருபோதும் அனுமதியோம். இந்துத்துவ அமைப்புகளின் கலவரம் உருவாக்கும் முயற்ச்சியை தடுத்து தக்க சமயத்தில் அமைதியை நிலைநாட்டி கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறோம். மதவாத சக்திகளுக்கு எதிரான முதல்வரின் நடவடிக்கைகளுக்கு என்றும் துணை நிற்போம்.மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு பல நூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக கோயில் கருவறைக்கு நேர் மேலே இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் இருக்கும் தீபத்தூனில் தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.மேலும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தலைமை அர்ச்சகர் ராஜா பட்டர், அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானியர்களின் கருத்தும்  இதுதான். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல வழக்குகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் அதன் பிறகும் பல நேரங்களில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திட்ட திராவிட பாடல் அரசுக்கும்,தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் மதுரை வாழ் மக்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள். மதவாத சக்திகளின் கலவர முயற்சியை தடுக்கும் வகையில் எவ்வித தயக்கமுமின்றி துணிச்சலுடன் நடவடிக்கைகள் எடுத்து வரும் திராவிட மாடல் அரசின் முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களை பாராட்டும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில்  சமூக பதற்றத்தை உருவாக்கும் மதவாத சக்திகளின் முயற்சிகளை முறியடித்திட சட்ட ரீதியான நடவடிக்கையை படுத்திட முதல்வர் அவர்களை வேண்டுகிறேன். இந்த மதவாத கும்பல்களின் கலவர முயற்சிகளை மக்கள் மன்றத்தின் முன் தொடர்ந்து அம்பலப்படுத்தி மேற்கொள்வதோடு, திராவிட மாடல் அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழ்ந்திட்ட போரின் முதல் இந்திய சுதந்திரப் போரின் பெண் வீராங்கனை பத்தியத்தை போரின் மூலம் விரட்டியடித்திட்ட வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெயரை புகழாரம் சூட்டும் வகையில் புதிதாக கட்டி உள்ள மதுரையில் புதிதாக கட்டி உள்ள சிவகங்கை சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு பெயர் சூட்டியதை தெற்கு சீமை உபகையுடன் வரவேற்று வாழ்த்தி பாராட்டுகளை தெரிவிக்கிறது.