தேனி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்

தேனி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்
தேனி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்

எருமலைநாயக்கன்பட்டியில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே எருமலை நாயக்கன்பட்டி பகுதியில், வராக நதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் மற்றும் விளக்க உரையாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், வராக நதி உழவர் உற்பத்தியாளர் நிறுவன சி.இ.ஓ. ஜோதிமணி சிவகுமார், சேர்மன் சிவகுமார் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் பாலமுருகன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய வேளாண்மை துறை அலுவலர் ஹரிஷ் ஹிராட்டன், வேளாண்மை துறை அலுவலர்(ஓய்வு) குணசேகரன், எப்ஆர்டிஎஸ் தலைமை நிர்வாகி தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை, விவசாயத்திற்கான மானியம் பெறுவதல், விவசாய நிலங்களில் விவசாய பரப்பை அதிகரித்தல், துரித வேளாண்மை முறை, மற்றும் இயற்கை உரம் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுதல், பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நவீனரக பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய விவசாய விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்வில், எருமலை நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாய பெருமக்கள், விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.